Tuesday, June 28, 2005

என்(வெண்)பாக்கள்

(எனது நண்பன்.. வெண்பா மன்னன் மணிவண்ணனின் கவிதை தொகுப்பு)




கான மயிலாடக் கண்டிருந்த வாங்கோழித்
தானு மதுவாகப் பாவித்துத் தானுந்தம்
பொல்லாச் சிறகவிரித் தாடினாற் போலும்மே
கல்லாதாங் கற்ற கவி. - ஒளவையார்.

கல்லாத போதுங் கவிபாட யத்தனித்தேம்
பொல்லாத வாங்கோழி போலவே - எல்லாப்
பிழையும் பொறுத்துப் புலமை யளித்து
விழைவானீ என்னா விலே.
(என்னை தேநீர் குடிக்க அழைத்து எழுதிய வெண்பாக்கள்)

அன்பாய் உரைத்தாலும் ஆரே ழுநிமிடத்தில்
முன்வாசல் டீக்கடயில் மூடிடுவர் - நண்பா
சிநேகமாய் கூப்பிட்டால் சீக்கிரமாய் நீயெழுந்து
வேகமாய் டீகுடிக்க வா.
(கடைசி ஐந்து நாட்கள் என்னை வெண்பா பாடி தேநீர் குடிக்க அழைத்தவை)

வருநாளில் நாம்சேர்ந்து வாழ்தல் நிகழாது
இருநாளில் டீகுடிப்போம் ஈங்கு - அருணேகேள்
பணம்கொடுத்தும் கிட்டாது பின்னாளில் வாய்ப்பு
கணப்பொழுதில் நீதான் கிளம்பு.

பத்தாண்டு பாராள பத்துதிங்கள் பிள்ளைபெற
பத்துநாள் போதும் பரியேற - மெத்தையில்
பத்துமணி தூங்க புறப்பட்டு டீக்குவா
பத்துநிமி டத்தில் பறந்து.

எப்போதும் போலவே எல்லாம் இருக்காது
முப்போது காணல் முடியாது - அப்பாநீ
தப்பாது வாராய் தமிழ்கூறி கூப்பிட்டேன்
இப்போது டீகுடிக்க இங்கு.

கண்ணும் பிறகாணக் கூசுதே னெஞ்சந்தா
னெண்ணும் பொழுதி லெரியுதே - மண்ணி
லின்னு முயிர்வாழ்தற் கிசையாதே யையோயெ
னன்பிற் குரியோளைக் கண்டு.

நாளை ஒருநாள்தான் நாம்சேர்ந்து நிற்கும்நாள்
வேளைவந்த திங்கே வெளியேற - நாளை
எங்கேயோ யாரோடோ எப்படியோ யாரரிவார்
இங்கேடீ குடிக்க இறங்கு.

இன்றல்லோ ப்ராசக்ட்; இறுதினாள் இன்றல்லோ
என்கோடு பீத்ரீயில் ஏறானாள் - இன்றல்லோ
எஞ்சியகோட் மீதிவைத்து ஏனயகோட் மூடிவைத்து
பெஞ்சினிலே போய்சேரும் நாள்.

No comments: