கடவுள் தன்னை வழிபட தானே ஒரு நூல் படைத்தால் அது திருமந்திரமாகத்தான் இருக்கும்.
அதனால் தான் மூலன் என்னும் இடையன் உடலுக்குள் சிவனே புகுந்து பாடினான் என்று சேக்கிழார் வியந்திருப்பார்.
------------கடவுளை உணர்வது எப்படி---------------------------------------------------
அன்புதான் எங்கள் சிவன் கடவுள். சிவம் வேறு அன்பு வேறு என்பார் அறியாமை மிக்கவர்கள். இரண்டும் ஒன்றே என்று அறிந்தவர் அன்பே உருவாக தாமே சிவமாக அமர்ந்திருப்பர்.
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே
--------- - கடவுளை காண்பது எப்படி ----------------------------------------------------------
மரயானையை வைத்து விளையாடும் குழந்தைக்கு யானை மட்டுமே தெரிகிறது. மரம் மறைந்து விடுகிறது.
யானையை பார்க்க விரும்பாதவனுக்கு அது வெறும் மரமாக மட்டுமே தெரிகிறது. யானை மறைந்து விடுகிறது.
உலகப் ொருள்களில் மூழ்கிவிடுபவர்க்கு இறைவன் தெரிவதில்லை. இறைமையை உணர்ந்தவருக்கு உலகமே இறைவனாக தெரிகிறது.
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே
அன்பின் மூலம் கடவுளை நமக்குள்ளே உணரலாம். அன்பின் மூலம் கடவுளை எங்கும் காணலாம் என்பது தான் திருமூலர் நமக்கு தரும் சூத்திரம்.
No comments:
Post a Comment