Wednesday, April 20, 2005

ஒளவையார் பாடல்கள்

பட்டியல் பாடல்கள்
*************************
பழக்கங்களால் வருவன -
சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்; - நித்தம்
நடையும் நடைப்பழக்கம்; நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.

பொருள் :-தயையும் = இரக்கமும்
வைத்ததொரு கல்வி = நல்ல கல்வி தேர்ச்சி

நல்லவை நான்கு
ஏசி இடலின் இடாமையே நன்று;
எதிரில்பேசுமனையாளில் பேய்நன்று - நேசம்
இலாவங்கணத்தில் நன்று வலியபகை;
வாழ்வில்லாச்சங்கடத்தில் சாதலே நன்று

பொருள் :-வங்கணத்தில் - நட்பில்

நல்வழியில் பயண்படாத செல்வம்
நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம், பேய்க்காம், பரத்தையர்க்காம் -
வம்புக்காம்கொள்ளைக்காம், கள்ளுக்காம், கோவுக்காம், சாவுக்காம்,கள்ளர்க்காம், தீக்காகும் காண்

பொருள் :-
நம்பன் அடியவர்க்கு - இறைவனின் அடியவர்க்கு
பம்புக்காம் - சூனியத்திற்காம்

அன்பில்லாள் இட்ட உணவு

காணக்கண் கூசுதே; கையெடுக்க நாணுதே;
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி யெரிகின்ற தையையோ
அன்பில்லாள் இட்ட அமுது

பொருள் :-மாணொக்க - உணவை ஏற்க
என்பெல்லாம் - எழும்பெல்லாம்


நாலு கோடி பாடல்
சோழ மன்னன் தனது புலவர்களை அழைத்து, நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும் என்று ஆணையிட்டான். புலவர்கள் திகைத்தனர். அப்போது அங்கே ஒளவையார் வந்தார்;  ‘இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம். இப்போதே நாலு கோடி பாடலைப் பாடுகிறேன்; மன்னனிடம் சென்று அதைப் பாடுங்கள்’ என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார்.  இதோ அந்த நாலு கோடி பாடலைப் பாருங்கள். 

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.

பொருள் : நாக்கோடாமை   -- வாக்கு தவறாமை


இனியது

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள் ளாரைக்கனவினும் நனவினும் காண்பதுதானே.

பொருள் :-ஆதி - இறைவன்
ஏகாந்தம் - தொல்லையில்லாத தனிமை

கொடியது

கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது அன்புஇலாப் பெண்டிர்
அதனினும் கொடிதுஇன்புற அவர்கையில் உண்பது தானே.விலகிச் செல்வது

தாயோடு அறுசுவைபோம்; - தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம்; - ஆயவாழ்வு
உற்றாருடன்போம்; உடன்பிறப்பால் தோள்வலிபோம்;
பொன்தாலி யோடுஎவையும் போம்.

பொருள் :-பொன்தாலியோடு - கட்டிய மனைவியோடு

அழகியவை

சுரதந் தனில்இளைத்த தோகை,
சுகிர்தவிரதம் தனில்இளைத்த மேனி, -
நிரதம்கொடுத்து இளைத்த தாதா, கொடும்சமரில்
பட்டவடுத்துளைத்த கல்அபிரா மம்.

பொருள் :-
சுரதந்தனில் - இன்பம் அனுபவித்ததால்
தோகை - பெண்தாதா - வள்ளல்
சமரில் - போரில்
அபிராமம் - அழகு

கம்பன் போட்டிப் பாடல்கள்
******************************

விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்
விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் - அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று.


பொருள்:-
அரையதனில் - இடுப்பில்

எட்டேகால் லட்சணமே, எமன்ஏ றும்பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
யாரையடா சொன்னாய் அது ?

பொருள்:-

எட்டேகால் லட்சணமே - அவ லட்சணமே
(எட்டு - அ என்றும் கால் - வ என்பதும் தமிழ் எழுத்து வடிவம்)
மட்டில் பெரியம்மை வாகனமே - மூதேவியின் வாகனமான கழுதை

கம்பரைப் போல் காப்பியம் பாடுவோர் இல்லை என்றதற்கு மறுமொழி

வான்குருவி யின்கூடு வல்லரக்கத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே என்று விமைசொல வேண்டாம்காண் !
எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது.

பொருள்:-
தேன்சிலம்பி - தேன் கூடு

கற்றதுகை மண்அளவு் கல்லாதது உலகுஅளவுஎன்று
கற்ற கலைமடந்தை ஓதுகிறாள் - மெத்த
வெறும்பந்தயம் கூற வேண்டாம் புலவீர்
எறும்பும்தன் கையால்எண் சாண்

பொருள்:
கலைமடந்தை ஓதுகிறாள் - கலைவாணியே இன்னும் படித்துக்கொண்டிருக்கிறாள்
எண்சாண் - எறும்பும் அதன் கையால் எட்டு சாண்

மாடு மேய்ப்பவனிடம் ஏமாந்த ஔவை :


ுரிம் - ாத ம் ்டு ்த ோது  ஒளவை ாடியது : 

கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கும் நாணும் - பெருங்கானில்
கார்எருமை மேய்க்கின்ற காளைக்குநான் தோற்றது
ஈரிரவு துஞ்சாது என்கண்

ொரள் : கதலித்தண்டு = வாழைத்தண்டு, 


உறுதியான கருங்காலிக் கட்டையை எளிதில் பிளக்கக் கூடிய கோடரி, வாழைத்தண்டை வெட்டும்போது சறுக்கும். அதுபோல நானும் எருமை மாடு மேய்க்கின்ற சிறுவனிடம் தோற்றுவிட்டேன்.  னி இரண்டு இரவுகள் ன் ள்  ாது.


மனைவி - இல்லறப் பாடல்கள்
**********************************

சத்தமில்லாமல் சந்நியாசம் போ -

பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டாணால்
எத்தாலும் கூடி யிருக்கலாம் - சற்றேனும்
ஏறுமா றாகஇருப்பாளே ஆமாயின்
கூறாமல் சந்நியாசம் கொள்.

பொருள் :-
பத்தாவுக்கு - ஆணுக்கு

விருந்து அறிவிக்க பட்டபாடு
இருந்து முகம் திருத்தி ஈரொடுபேன்
வாங்கிவிருந்து வந்தது என்று விளம்ப - வருந்திமிக
ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத் தான்

பொருள் :-இருந்து - அருகமர்ந்து
பழமுறத்தால் சாடினாள் - பழைய முறத்தால் அடித்தாள்

நல்ல மனைவியில்லையெனில் செல்வம் என்ன பயன் ?

சண்டாளி சூர்ப்பநகை தாடகையைப் போல்
வடிவுகொண்டாளைப் பெண்டுஎன்று கொண்டாயே - தொண்டர்
செருப்படிதான் செல்லாஉன் செல்வமென்ன செல்வம்?
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்.

பொருள் :-
செருப்படிதான் செல்லாஉன் செல்வம் - அடியார்களின் செருப்படிக்கு ஈடாகது உன் செல்வம்

பெண்ணோடு சேராதவனை எத்து..எத்து

எண்ணா யிரத்தாண்டு நீரில் கிடந்தாலும்
உள்ஈரம் பற்றாக் கிடையேபோல் - பெண்ணாவாய்
பொற்றொடி மாதர் புணர்முலைமேல் சாராரை
எற்றோமற்று எற்றோமற்று எற்று.

பொருள் :-
உள்ஈரம் பற்றாக் கிடையேபோல் - நனையாத உடலைப்போல்

1 comment:

Mohan's said...

Hi can u add meaning for the songs in tamil