Friday, March 20, 2020

திருமந்திரம் - கடவுளின் பார்வை


கடவுள் தன்னை வழிபட தானே ஒரு நூல் படைத்தால் அது திருமந்திரமாகத்தான் இருக்கும்.

அதனால் தான் மூலன் என்னும் இடையன் உடலுக்குள் சிவனே புகுந்து பாடினான் என்று சேக்கிழார் வியந்திருப்பார்.


------------கடவுளை உணர்வது எப்படி---------------------------------------------------

அன்புதான் எங்கள் சிவன் கடவுள். சிவம் வேறு அன்பு வேறு என்பார் அறியாமை மிக்கவர்கள். இரண்டும் ஒன்றே என்று  அறிந்தவர் அன்பே உருவாக தாமே சிவமாக அமர்ந்திருப்பர்.


அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே



--------- - கடவுளை காண்பது எப்படி ----------------------------------------------------------

மரயானையை வைத்து விளையாடும் குழந்தைக்கு யானை மட்டுமே தெரிகிறது. மரம் மறைந்து விடுகிறது.

யானையை பார்க்க விரும்பாதவனுக்கு அது வெறும் மரமாக மட்டுமே தெரிகிறது. யானை மறைந்து விடுகிறது.


உலகப் ொருள்களில் மூழ்கிவிடுபவர்க்கு இறைவன் தெரிவதில்லை. இறைமையை உணர்ந்தவருக்கு உலகமே இறைவனாக தெரிகிறது.



மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே



அன்பின் மூலம் கடவுளை நமக்குள்ளே உணரலாம். அன்பின் மூலம் கடவுளை எங்கும் காணலாம் என்பது தான் திருமூலர் நமக்கு தரும் சூத்திரம்.

Wednesday, January 10, 2018

தமிழை ஆண்டாள் - கவிஞர் வைரமுத்து


                            மார்கழி அழகானது;  நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் - விலங்குகள் - பறவைகள் - தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புற ஊதாக் கதிர்களை பூமியில் புகவிடாவண்ணம் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் ஆக்கப்பட்ட ஓசோன்(O3) கூரையைத் திண்மை செய்வதும் இந்த மார்கழிதான்.

மார்கழியின் அதிகாலை மனோகரமானது.
தாயைத் தொட்டுக்கொண்டு குழந்தை உறங்குகிறது;
தாய்ப் பறவையைத் தழுவிக்கொண்டு குஞ்சு உறங்குகிறது;
இலைகளைப் போர்த்துக்கொண்டு மரம் உறங்குகிறது;
கரைகளை முட்டிக்கொண்டு குளம் உறங்குகிறது.
தன்னைத்தானே கட்டிக்கொண்டு முதுமை உறங்குகிறது.
"இன்னுமா உறக்கம்!
எல்லே இளங்கிளியே!
எழுந்து வா வெளியே' என்று ஆண்டாளின் ஆசைக்குரல் அப்போது ஆணையிடுகிறது.
"மார்கழி நீராட வாரீரோ மங்கையரே' என்று அது எல்லாக் கதவுகளையும் எட்டித் தட்டுகிறது.

அதிகாலை எழுவதே வாழ்வியல் ஒழுக்கம். இந்த நெடுங்குளிரில் நீராடுவது உடல் வெப்பத்துக்கும் மனத் திட்பத்துக்கும் ஆண்டாள் நிகழ்த்தும் அமிலச் சோதனை. இந்த அதிகாலை ஒழுக்கத்திற்குப் பாவை நோன்பு என்பது சடங்கு; கண்ணன் என்பதொரு காரணம்.பாகவதத்தில் சொல்லப்படும் கார்த்தியாயினி நோன்புக்கும், ஆண்டாளின் திருப்பாவை நோன்புக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. கண்ணனே கணவனாய் அமைய நோற்பது கார்த்தியாயினி நோன்பு. நல்லதோர் கணவனை அடைய நோற்பது மட்டுமே திருப்பாவை நோன்பு.
                    "எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க' என்பதே நோன்பு. ஆனால் நாங்கள் நலம்காண வேண்டும் என்ற தன்னலம் தாண்டி, நாடு நலம்காண வேண்டும் என்ற பொதுப்பண்பில் இயங்குவதுதான் நோன்பின் மாண்பு. 

"நாங்கள்நம் பாவைக்குச் சாற்றி நீராடினால், திங்கள் மும்மாரி பெய்யும்; நெல்லோடு கயல் உகளும்; பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுக்கும்; வள்ளல் பெரும்பசுக்கள் வாங்கக் குடம் நிறைக்கும், ஆதலால் - மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்'- இப்படி உயிரியல் - வாழ்வியல் - சமூகவியல் என்ற மூன்றையும் முன்னிறுத்துவதாகப் பாவை நோன்பு பார்க்கப்படுகிறது. வைணவத்தின் வளர்ச்சியில் திருப்பாவை செல்வாக்குற்றது அல்லது திருப்பாவை செல்வாக்குற்றதில் வைணவம் வளர்ந்தது.

தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றில் ஆறாம் - ஏழாம் நூற்றாண்டுகளைப் போகிற போக்கில் புறந்தள்ளிவிட முடியாது.  இயற்கையோடு இயைந்த தமிழர் வாழ்வு அந்த நூற்றாண்டுகளில்தான் இறையோடு இழைந்தது. அறம்பற்றி நடந்த தமிழர் இறைபற்றி நடக்கத் தலைப்பட்டதும் இந்த நூற்றாண்டிலேதான். சமண - பௌத்த மதங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வைதிக மதம் தன் கட்டுக்களைச் சற்றே கழற்றத் தொடங்கியது. கடவுள் இல்லாமலும் மதங்களுண்டு. ஆனால் மனிதர்கள் இல்லாமல் மதங்கள் இல்லை என்ற "மெய்ஞ்ஞானம்' வாய்க்கப்பெற்ற பிறகு தன் இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு மக்களை நோக்கி இறங்கி வந்தது. யாகம் - யக்ஞம் - தவம் - வேள்வி - விரதம் என்ற கடுநெறிகளைக் கழற்றி எறிந்துவிட்டுக் கடவுளின் நற்குணங்கள் என்று கருதப்பட்ட வாத்சல்யம் - காருண்யம் - சௌலப்பியம் முதலியவற்றை முன்னிறுத்தியே முக்தியுற முடியும் என்ற புதிய சலுகை மக்களிடம் போதிக்கப்பட்டது.

எல்லாச் சாதியார்க்கும் மதம் தேவைப்பட்டதோ இல்லையோ எல்லாச் சாதியரும் மதத்திற்குத் தேவைப்பட்டார்கள். எந்த மதம் சாதிய அடுக்குகளைக் கெட்டிப்படுத்தியதோ அதே மதம் கொண்டு அதை உடைத்தெறியவும் சிந்தித்தார்கள்.  "இறை நேயம் என்பதே சாதி என்னும் மம்மர் அறுக்கும் மருந்து' என்று நாயன்மார்களைப் போலவே ஆழ்வார்களும் நம்பினார்கள். "இழிகுலத்தவர்களேனும் எம்மடியார்கள் ஆகின் தொழுமின் கொடுமின் கொண்மின்' -என்று தொண்டரடிப் பொடியாழ்வார் சாதிபேதம் ஒழிந்ததென்று சங்கூதினார். வர்க்கபேதம் ஒழியாமல் சாதிபேதம் ஒழியாது என்ற பிற்காலப் பேரறிவை அவர்கள் அக்காலத்தில் பெற்றிருக்கவில்லை. இறைவன்முன் எல்லாரும் சமம் என்னும் குறுகிய பரவசம் ஒன்றே அவர்களைக் கூட்டுவித்தது; கொண்டு செலுத்தியது. 

Tuesday, November 01, 2016

அற்பர் கல்வி --பாரதி சுயசாிதையிலிருந்து






ஆங்கில கல்வியை யாா் படிப்பாா் என பட்டியலிட்ட பாரதி :
 

நெல்லையூர் சென்றவ் வூணர் கலைத்திறன்
நேரு மாறெனை எந்தை பணித்தனன்;
புல்லை யுண்கென வாளரிச் சேயினைப்
போக்கல் போலவும்,ஊன்விலை வாணிகம்
நல்ல தென்றொரு பார்ப்பனப் பிள்ளையை
நாடு விப்பது போலவும்,எந்தைதான்
அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை
ஆரி யர்க்கிங் கருவருப் பாவதை, 21
நரியு யிர்ச்சிறு சேவகர்,தாதர்கள்,
நாயெ னத்திரி யொற்றர்,உணவினைப்
பெரிதெ னக்கொடு தம்முயிர் விற்றிடும்
பேடியர்,பிறர்க் கிச்சகம் பேசுவோர்,
கருது மிவ்வகை மாக்கள் பயின்றிடுங்
கலைப யில்கென என்னை விடுத்தனன்,

நெல்லையூா் - திருநெல்வேலி
ஊணா் --  வெளிநாட்டினா்
எந்தை - தந்தை




ஆங்கில கல்வியின் இறுதி பயன் :

செலவு தந்தைக்கு ஓர்ஆயிரம் சென்றது;
     தீது எனக்குப் பல்ஆயிரம் சேர்ந்தன;
நலம்ஓர் எள்துணையும்கண்டிலேன் அதை
     நாற் பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்!

யானை இறைத்த சோறு...



வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பின்
தூங்குங் களிறோ துயருறா - ஆங்கதுகொண்
டூரும் எறும்பிங் கொருகோடி யுய்யுமால்
ஆருங் கிளையோ டயின்று!!



உண்ணும் கவளத்தில் ஒரு வாய் தப்பி கீழே விழுந்து விட்டால் அதை உண்ணும் யானை அதற்காக துயருறாது. 

ஆனால் அங்கே ஊரும் எறும்பு, தன் ஒரு கோடி சுற்றத்துடன் உண்டு மகிழும். 


-- குமரகுருபா்  நீதிநெறி

Friday, November 06, 2015

திருமூலா் - அறிவியல் சிந்தனை



முட்டை பிறந்தது  முந்நூறு நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பாா்மணம் பன்னிரண்டு ஆன்டினில்
கெட்டது எழுபதில் கேடறி யீரே !!

--

பொருள் :

தாய்  வயிற்றில் முட்டை வளர்ந்து (ovary eggs )  குழந்தை ஆவது பத்து மாதத்தில் !
இட்டவன் ஏதோ ஏழையோன்  நினைத்தது போல் இந்த உடம்பு அமைந்ததில்லை !
அந்த உடம்பின் மனமும் பன்னிரண்டு ஆண்டினில் பாழ்பட ஆரம்பித்தது !
எழுபது வயதில் கெட்டு மடிந்தது ..  வாழ்க்கை அவ்வளவு தான்.


அந்தக் காலத்திலேயே கருமுட்டை தான் வளா்ந்து உயிராகிறது  என்றும் , அப்பன் இட்ட போது (sperm)  நினைத்த மாதிாி  ( ஆணாகப் - பெண்ணாக வோ மேலும் அவா் நினைத்த மாதிாியோ) குழந்தை பிறப்பதில்லை என்று சொன்ன அதியசமான  கவிதை

Monday, January 28, 2013

பெண்ணாகிய மாயப்பிசாசு - பட்டினத்தார் .



பெண்ணாகிய  மாயப்பிசாசு

“காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட
தூதென் றெண்ணாமற் சுகமென்று நாடுமித் துர்ப்புத்தியை
ஏதென் றெடுத்துரைப்பேன்?”

பொருள் : மறலிவிட்ட தூது -- எமன் விட்ட தூது

பெண்ணாகி வந்ததொரு மாயப்பி சாசும் பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப்பொருள் பறிக்க
எண்ணா துனைமறந் தேனிறைவா !


பெண் என்பவள் பட்டினத்தாருக்கு ”கண்ணழகை , காதழகை,  மூக்கழகை காட்டி .. கண்ணால்   உருட்டி முலையால் மயக்கி பாழுங் குழியினில் தள்ளிவிடும் மாயப்பிசாசாக .. எமன் விடு தூதாக” தெரிகிறாள்


பெண்ணை இப்படி வெறுத்து ஒதுக்கி தள்ளும் பட்டினத்தார்  தான் .. தன் தாயாகிய  பெண்ணுக்கு சிதை மூட்டும் போது இப்படி கண்ணீா் வடிக்கிறார்.


முந்தித் தவம்கிடந்து முந்நூறு நாள் சுமந்தே
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்.


Wednesday, November 25, 2009

மூதுரை - எளிய சொற்கள்.. அரிய பாடல்கள்

அனைத்து பாடல்களும் பழமொழி பாணியில், ஒரு முறை படித்தாலும் என்றும் நினைவில் நிற்கும்படி அமைந்திருக்கிறது.

நன்றி

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால். 1

சொற்கள் :
தளரா வளர்தெங்கு - தளராமல் வளரும் தென்னை : தாளுண்ட - தான் உண்ட


இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும்-இன்னாத
நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு 3

பொருள் :
இளமையில் வறுமை இன்னா (துன்பம்)
இன்னா அளவில் (முதுமையில்) இனியவும் (செல்வம்) இன்னா.

அட்டாலும் பால் சுவையில் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும் 4

அட்டாலும் - காய்ச்சினாலும்
அளவளாய் நட்டாலும் - நட்பு கொண்டாலும்.



நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று 8

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. 9

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10

பண்டு முளைப்பத தரிசியே யானாலும்
விண்டுமி போனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாத தளவின்றி
ஏற்ற கருமஞ் செயல். 11

அளவின்றி - துணையின்றி

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி 14

அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு 16

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு 17

குறுந்தொகை

கன்று முண்ணாது கலத்தினும் படா அது
நல்லான் தீம்பால் நிலத்துஉக் காங்கு
எனக்கும் ஆகாது என்ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல்என் மாமைக் கவினே

- வெள்ளிவீதியார்.

அறிய சொற்கள் :

திதலை - தேமல் : அல்குல் - இடையும் மேல் தொடைப்பகுதியும்
மாமை - பேரழகு : கவினே - வீணே

பொருள் :

கண்ணும் உண்ணாமல் கலத்திலும் சேராமல் பசுவின் பால் நிலத்தில் வீணாவது போல், என் பேரழகு எனக்கும் ஆகாமல் என் ஐயனுக்கும் ஆகாமல் என் உடலை பசலை உண்கிறது. தேமலால் என் அல்குல் பேரழகு வீணாகிறது.

Tuesday, June 28, 2005

என்(வெண்)பாக்கள்

(எனது நண்பன்.. வெண்பா மன்னன் மணிவண்ணனின் கவிதை தொகுப்பு)




கான மயிலாடக் கண்டிருந்த வாங்கோழித்
தானு மதுவாகப் பாவித்துத் தானுந்தம்
பொல்லாச் சிறகவிரித் தாடினாற் போலும்மே
கல்லாதாங் கற்ற கவி. - ஒளவையார்.

கல்லாத போதுங் கவிபாட யத்தனித்தேம்
பொல்லாத வாங்கோழி போலவே - எல்லாப்
பிழையும் பொறுத்துப் புலமை யளித்து
விழைவானீ என்னா விலே.
(என்னை தேநீர் குடிக்க அழைத்து எழுதிய வெண்பாக்கள்)

அன்பாய் உரைத்தாலும் ஆரே ழுநிமிடத்தில்
முன்வாசல் டீக்கடயில் மூடிடுவர் - நண்பா
சிநேகமாய் கூப்பிட்டால் சீக்கிரமாய் நீயெழுந்து
வேகமாய் டீகுடிக்க வா.
(கடைசி ஐந்து நாட்கள் என்னை வெண்பா பாடி தேநீர் குடிக்க அழைத்தவை)

வருநாளில் நாம்சேர்ந்து வாழ்தல் நிகழாது
இருநாளில் டீகுடிப்போம் ஈங்கு - அருணேகேள்
பணம்கொடுத்தும் கிட்டாது பின்னாளில் வாய்ப்பு
கணப்பொழுதில் நீதான் கிளம்பு.

பத்தாண்டு பாராள பத்துதிங்கள் பிள்ளைபெற
பத்துநாள் போதும் பரியேற - மெத்தையில்
பத்துமணி தூங்க புறப்பட்டு டீக்குவா
பத்துநிமி டத்தில் பறந்து.

எப்போதும் போலவே எல்லாம் இருக்காது
முப்போது காணல் முடியாது - அப்பாநீ
தப்பாது வாராய் தமிழ்கூறி கூப்பிட்டேன்
இப்போது டீகுடிக்க இங்கு.

கண்ணும் பிறகாணக் கூசுதே னெஞ்சந்தா
னெண்ணும் பொழுதி லெரியுதே - மண்ணி
லின்னு முயிர்வாழ்தற் கிசையாதே யையோயெ
னன்பிற் குரியோளைக் கண்டு.

நாளை ஒருநாள்தான் நாம்சேர்ந்து நிற்கும்நாள்
வேளைவந்த திங்கே வெளியேற - நாளை
எங்கேயோ யாரோடோ எப்படியோ யாரரிவார்
இங்கேடீ குடிக்க இறங்கு.

இன்றல்லோ ப்ராசக்ட்; இறுதினாள் இன்றல்லோ
என்கோடு பீத்ரீயில் ஏறானாள் - இன்றல்லோ
எஞ்சியகோட் மீதிவைத்து ஏனயகோட் மூடிவைத்து
பெஞ்சினிலே போய்சேரும் நாள்.

Thursday, May 12, 2005

அம்பிகாவதி பாடல்கள்

மன்னர் மகளை அவர் முன்னே புகழ்ந்து பிறகு சப்பைகட்டு கட்டிய பாடல்

இட்டடி நோவ, எடுத்தடி கொப்புளிக்க
வட்டில் சுமந்து மருங்கு அசையக் - கொட்டிக்
கிழங்கோ கிழங்குஎன்று கூறுவாள் நாவில்
வழங்குஓசை வையம் பெறும்

பொருள்:-

மருங்கு - இடை

அமராவதியை நினைத்து உருகுதல்

உருகி உடல்கருகி உள்ளீரல் பற்றி
எரிவது அவியாது என்செய்கேன் - வரியரவ
நஞ்சிலே தோய்ந்த நளினவிழிப் பெண்பெருமாள்
நெஞ்சிலே இட்ட நெருப்பு

பொருள்:-
அரவம் - பாம்பு
அவியாது - ஆறாது


பழகுவதற்காக திருமகளையும் பழகியபின் இவளையும் படைத்தானோ நான்முகன் பிரம்மன் ?

மய்வடிவக் குழலியர்தம் வதனத்தை
நிகரொவ்வா மதியே, மானே
செய்வடிவைச் சிற்றிடையைத் திருநகையை
வேய்த்தோளைத் தெய்வமாக
இவ்வடிவைப் படைத்தவடிவு எவ்வடிவோ ?
யானறியேன் உண்மை யாகக்
கய்படியத் திருமகளைப் படைத்திவளைப்
படைத்தனன்நல் கமலத் தோனே..


பொருள்: -

மய்வடிவக் குழலியர் - மை போன்ற கூந்தல் பெண்டிர்
வேய்ததோளை - மூங்கில் போன்ற தோளை
கய்படியத் - கை பழகுவதற்காக

மகளின் காதலை அறிந்த கேட்ட மன்னன் வெகுண்டெழுந்தது

கண்டீரோ காணம்பி காபதி செயும்பிழையைக்.
கண்டீரோ நம்மீதில் கள்ளம்இல்லை - உண்டோகாண்
ஆற்றாத கோபம் அடங்கஇவ னைஒட்டக்
கூத்தா,என் செய்திடலாம் கூறு


பொருள்:-

என்மீது பிழையில்லை. பிழைசெய்த அம்பிகாபதியை என் செய்யலாம் என ஒட்டக்கூத்தனை வினவினார்

ஒட்டக்கூத்தன் கூறிய தண்டனை

பனிப்பபகையோன் மாமரபின் பார்த்திபனே, சோழா,
உனக்கினியான் சொல்லுவது ஒன்றுண்டோ ? - கனத்த
பிழைசெய்தான் அன்னைக்குப், பின்பார்க்க வேண்டா
கழுவினிலே ஏற்றிவிடல் காண்.


பொருள்:-

தாய் போன்றவளுக்குப் பிழைசெய்தவனை கழுவில் ஏற்று.

- இதன் பின் இறைவனை பற்றி 100 பாடல் பாடினால் தன் மகளைத்தருவதாக மன்னன் போட்டி இடுகிறான். தவறாக கணக்கிட்ட அமராவதி 99 பாடலிலேயே வெளியே எட்டிப் பார்க்கிறாள்

திரையை விளக்கி வெளியே தோன்றிய அமராவதியைக் கண்ட அம்பிகாவதி போட்டியை மறந்து பாடிய காமத்துக்பால் பாடல்

சற்றே பருத்த தனமே குலுங்கத் தரளவடம்
துற்றே அசையக் குழையூசல் ஆடத்துவர் கொள்செவ்வாய்
நற்றேன் ஒழுக நடன சிங்கார நடைஅழகின்
பொற்றேர் இருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே.

பொருள்:-

தரளவடம் - முத்துமாலை
துற்றே - நெருங்கி
குழையூசல் - காதணி
பொற்றேர் - பொன்னாலான தேர்போன்ற உடல் உள்ளே இருக்கத்

என்ன பாவம் செய்தாய் - தண்டனை இனி தவிர்ககமுடியாது என சோழன் பாடியது

வீரமுண்டோ மதன்கை அம்பினால் வெந்து வீழுகைக்கு
நேரமுண்டோ வஞ்சி நேர்பட்ட காலையில் நெஞ்சைவிடப்
பேரமுண்டோ சொல ஓண்ணாத காமப் பெருநெருப்புக்கு
ஈரம்உண்டோ ஐயனே என்னபாவம் இனிச்சொல்வதே.

பொருள்:-

நேரமுண்டோ - வஞ்சி முன் பின் நடக்கப்போவதை சிந்திக்க நேரமுண்டோ
பேரமுண்டோ - நெஞ்சு நெகிழ்வதைத் தவிர வேறு வழியிண்டோ

Wednesday, April 20, 2005

ஒளவையார் பாடல்கள்

பட்டியல் பாடல்கள்
*************************
பழக்கங்களால் வருவன -
சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்; - நித்தம்
நடையும் நடைப்பழக்கம்; நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.

பொருள் :-தயையும் = இரக்கமும்
வைத்ததொரு கல்வி = நல்ல கல்வி தேர்ச்சி

நல்லவை நான்கு
ஏசி இடலின் இடாமையே நன்று;
எதிரில்பேசுமனையாளில் பேய்நன்று - நேசம்
இலாவங்கணத்தில் நன்று வலியபகை;
வாழ்வில்லாச்சங்கடத்தில் சாதலே நன்று

பொருள் :-வங்கணத்தில் - நட்பில்

நல்வழியில் பயண்படாத செல்வம்
நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம், பேய்க்காம், பரத்தையர்க்காம் -
வம்புக்காம்கொள்ளைக்காம், கள்ளுக்காம், கோவுக்காம், சாவுக்காம்,கள்ளர்க்காம், தீக்காகும் காண்

பொருள் :-
நம்பன் அடியவர்க்கு - இறைவனின் அடியவர்க்கு
பம்புக்காம் - சூனியத்திற்காம்

அன்பில்லாள் இட்ட உணவு

காணக்கண் கூசுதே; கையெடுக்க நாணுதே;
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி யெரிகின்ற தையையோ
அன்பில்லாள் இட்ட அமுது

பொருள் :-மாணொக்க - உணவை ஏற்க
என்பெல்லாம் - எழும்பெல்லாம்


நாலு கோடி பாடல்
சோழ மன்னன் தனது புலவர்களை அழைத்து, நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும் என்று ஆணையிட்டான். புலவர்கள் திகைத்தனர். அப்போது அங்கே ஒளவையார் வந்தார்;  ‘இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம். இப்போதே நாலு கோடி பாடலைப் பாடுகிறேன்; மன்னனிடம் சென்று அதைப் பாடுங்கள்’ என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார்.  இதோ அந்த நாலு கோடி பாடலைப் பாருங்கள். 

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.

பொருள் : நாக்கோடாமை   -- வாக்கு தவறாமை


இனியது

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள் ளாரைக்கனவினும் நனவினும் காண்பதுதானே.

பொருள் :-ஆதி - இறைவன்
ஏகாந்தம் - தொல்லையில்லாத தனிமை

கொடியது

கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது அன்புஇலாப் பெண்டிர்
அதனினும் கொடிதுஇன்புற அவர்கையில் உண்பது தானே.



விலகிச் செல்வது

தாயோடு அறுசுவைபோம்; - தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம்; - ஆயவாழ்வு
உற்றாருடன்போம்; உடன்பிறப்பால் தோள்வலிபோம்;
பொன்தாலி யோடுஎவையும் போம்.

பொருள் :-பொன்தாலியோடு - கட்டிய மனைவியோடு

அழகியவை

சுரதந் தனில்இளைத்த தோகை,
சுகிர்தவிரதம் தனில்இளைத்த மேனி, -
நிரதம்கொடுத்து இளைத்த தாதா, கொடும்சமரில்
பட்டவடுத்துளைத்த கல்அபிரா மம்.

பொருள் :-
சுரதந்தனில் - இன்பம் அனுபவித்ததால்
தோகை - பெண்தாதா - வள்ளல்
சமரில் - போரில்
அபிராமம் - அழகு

கம்பன் போட்டிப் பாடல்கள்
******************************

விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்
விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் - அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று.


பொருள்:-
அரையதனில் - இடுப்பில்

எட்டேகால் லட்சணமே, எமன்ஏ றும்பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
யாரையடா சொன்னாய் அது ?

பொருள்:-

எட்டேகால் லட்சணமே - அவ லட்சணமே
(எட்டு - அ என்றும் கால் - வ என்பதும் தமிழ் எழுத்து வடிவம்)
மட்டில் பெரியம்மை வாகனமே - மூதேவியின் வாகனமான கழுதை

கம்பரைப் போல் காப்பியம் பாடுவோர் இல்லை என்றதற்கு மறுமொழி

வான்குருவி யின்கூடு வல்லரக்கத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே என்று விமைசொல வேண்டாம்காண் !
எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது.

பொருள்:-
தேன்சிலம்பி - தேன் கூடு

கற்றதுகை மண்அளவு் கல்லாதது உலகுஅளவுஎன்று
கற்ற கலைமடந்தை ஓதுகிறாள் - மெத்த
வெறும்பந்தயம் கூற வேண்டாம் புலவீர்
எறும்பும்தன் கையால்எண் சாண்

பொருள்:
கலைமடந்தை ஓதுகிறாள் - கலைவாணியே இன்னும் படித்துக்கொண்டிருக்கிறாள்
எண்சாண் - எறும்பும் அதன் கையால் எட்டு சாண்

மாடு மேய்ப்பவனிடம் ஏமாந்த ஔவை :


ுரிம் - ாத ம் ்டு ்த ோது  ஒளவை ாடியது : 

கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கும் நாணும் - பெருங்கானில்
கார்எருமை மேய்க்கின்ற காளைக்குநான் தோற்றது
ஈரிரவு துஞ்சாது என்கண்

ொரள் : கதலித்தண்டு = வாழைத்தண்டு, 


உறுதியான கருங்காலிக் கட்டையை எளிதில் பிளக்கக் கூடிய கோடரி, வாழைத்தண்டை வெட்டும்போது சறுக்கும். அதுபோல நானும் எருமை மாடு மேய்க்கின்ற சிறுவனிடம் தோற்றுவிட்டேன்.  னி இரண்டு இரவுகள் ன் ள்  ாது.


மனைவி - இல்லறப் பாடல்கள்
**********************************

சத்தமில்லாமல் சந்நியாசம் போ -

பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டாணால்
எத்தாலும் கூடி யிருக்கலாம் - சற்றேனும்
ஏறுமா றாகஇருப்பாளே ஆமாயின்
கூறாமல் சந்நியாசம் கொள்.

பொருள் :-
பத்தாவுக்கு - ஆணுக்கு

விருந்து அறிவிக்க பட்டபாடு
இருந்து முகம் திருத்தி ஈரொடுபேன்
வாங்கிவிருந்து வந்தது என்று விளம்ப - வருந்திமிக
ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத் தான்

பொருள் :-இருந்து - அருகமர்ந்து
பழமுறத்தால் சாடினாள் - பழைய முறத்தால் அடித்தாள்

நல்ல மனைவியில்லையெனில் செல்வம் என்ன பயன் ?

சண்டாளி சூர்ப்பநகை தாடகையைப் போல்
வடிவுகொண்டாளைப் பெண்டுஎன்று கொண்டாயே - தொண்டர்
செருப்படிதான் செல்லாஉன் செல்வமென்ன செல்வம்?
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்.

பொருள் :-
செருப்படிதான் செல்லாஉன் செல்வம் - அடியார்களின் செருப்படிக்கு ஈடாகது உன் செல்வம்

பெண்ணோடு சேராதவனை எத்து..எத்து

எண்ணா யிரத்தாண்டு நீரில் கிடந்தாலும்
உள்ஈரம் பற்றாக் கிடையேபோல் - பெண்ணாவாய்
பொற்றொடி மாதர் புணர்முலைமேல் சாராரை
எற்றோமற்று எற்றோமற்று எற்று.

பொருள் :-
உள்ஈரம் பற்றாக் கிடையேபோல் - நனையாத உடலைப்போல்