பெண்ணாகிய மாயப்பிசாசு
“காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட
தூதென் றெண்ணாமற் சுகமென்று நாடுமித் துர்ப்புத்தியை
ஏதென் றெடுத்துரைப்பேன்?”
பொருள் : மறலிவிட்ட தூது -- எமன் விட்ட தூது
பெண்ணாகி வந்ததொரு மாயப்பி சாசும் பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப்பொருள் பறிக்க
எண்ணா துனைமறந் தேனிறைவா !
பெண் என்பவள் பட்டினத்தாருக்கு ”கண்ணழகை , காதழகை, மூக்கழகை காட்டி .. கண்ணால் உருட்டி முலையால் மயக்கி பாழுங் குழியினில் தள்ளிவிடும் மாயப்பிசாசாக .. எமன் விடு தூதாக” தெரிகிறாள்
பெண்ணை இப்படி வெறுத்து ஒதுக்கி தள்ளும் பட்டினத்தார் தான் .. தன் தாயாகிய பெண்ணுக்கு சிதை மூட்டும் போது இப்படி கண்ணீா் வடிக்கிறார்.
முந்தித் தவம்கிடந்து முந்நூறு நாள் சுமந்தே
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்.
No comments:
Post a Comment