முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பாா்மணம் பன்னிரண்டு ஆன்டினில்
கெட்டது எழுபதில் கேடறி யீரே !!
--
பொருள் :
தாய் வயிற்றில் முட்டை வளர்ந்து (ovary eggs ) குழந்தை ஆவது பத்து மாதத்தில் !
இட்டவன் ஏதோ ஏழையோன் நினைத்தது போல் இந்த உடம்பு அமைந்ததில்லை !
அந்த உடம்பின் மனமும் பன்னிரண்டு ஆண்டினில் பாழ்பட ஆரம்பித்தது !
எழுபது வயதில் கெட்டு மடிந்தது .. வாழ்க்கை அவ்வளவு தான்.
அந்தக் காலத்திலேயே கருமுட்டை தான் வளா்ந்து உயிராகிறது என்றும் , அப்பன் இட்ட போது (sperm) நினைத்த மாதிாி ( ஆணாகப் - பெண்ணாக வோ மேலும் அவா் நினைத்த மாதிாியோ) குழந்தை பிறப்பதில்லை என்று சொன்ன அதியசமான கவிதை
No comments:
Post a Comment